இந்திய பெருங்கடல் இன்று சீன பெருங்கடலாக மாறுகிறது

peoplenews lka

இந்திய பெருங்கடல் இன்று சீன பெருங்கடலாக மாறுகிறது

இந்திய பெருங்கடல் இன்று சீன பெருங்கடலாக மாறுகிறது..!



சீனா மிகப் பெரிய தேசம். உலகில் அதிகூடிய சனத்தொகை உடைய நாடு. மிக நீண்ட வரலாற்றுப் பின்னணி உடைய நாடு. இன்று மிகத் திடமான பொருளாதாரப் பின்னணியை பெற்றுள்ள நாடு. இவைகள் அனைத்தும் இருந்தும் அதனுடைய அமைவிடம் காரணமாக பெருங்கடல் (Ocean) ஒன்றினை தன்கத்தே பெற்றுக்கொள்ளவில்லை. இந்த இடைவெளியை நிறப்புவதற்கு கடந்த மூன்று தசாப்த்தங்களாக இந்திய பெருங்கடலை மையப்படுத்தி பாரிய முயற்சிகளை சீனா மேற்கொண்டு வருகின்றது.

இன்று அமரிக்காவும் இந்தியாவும் சீனாவின் கடன் பொறி இராஜதந்திர ( debit-trap diplomacy) முறையைக் கண்டு மிரண்டு போயுள்ளார்கள். இந்த பொறியினை கடன் வழங்குதல், அதிகாரம் செலுத்துதல், பின்னர் இராணுவ பரம்பலை நிலைநிறுத்துதல் என்ற கட்டங்களாக சீனா முயல்வதாக அமரிக்கா ஆணித்தரமாக நம்புகின்றது. சீனா தன்னுடைய ஆளுமையினை இராணுவப் பரம்பலினூடாக அடையும் இராஜதந்திர நகர்வுகளை ஐந்து நோக்கங்கள் அடிப்படையக செய்வதாக தெரிகின்றது.

முதலாவது, தன்னுடை நாட்டவர்களை பாதுகாப்பது, தங்கள் முதலீடுகளை பாதுகாப்பது மற்றும் தங்கள் அதிகார முறைமையை மேம்படுத்துவது. இரண்டாவது, ஒருதலைப்பட்ச்சமாகவோ அல்லது தங்கள் பங்குதாரர்களுடன் இணைந்து தங்களுக்கு தலையிடியாக இருக்கும் நிறுவனங்களுக்கு பயங்கரவாத எதிரப்பு நடவடிக்கைகளை முன்னகர்த்துதல். மூன்றவது, தங்களுடைய செயற்பாடுகளுக்கு தேவையான மற்றும் தங்கள் முக்கிய விரோதிகளுக்கு எதிரான வேவு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். நான்காவது, இந்திய பெருங்கடலில் இருக்கும் சிறிய நாடுகளை கட்டாய இராஜதந்திர முறைமூலம் கட்டுப்படுத்துதல். ஐந்தாவது, வர்த்தக உடன்பாடுகளை தடுக்கவோ அல்லது தணிக்கவோ அல்லது முடிவுக்குகொண்டுவரவோ தேவையான இடைமறிப்பு சக்தியினைப் பெற்றுக்கொள்ளுதல்.

இவ்வாறு தனது இராணுவ பலத்தினை நிலைநிறுத்துவதற்கு கடன் பொறி இராஜதந்திர முறையினை இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள நாடுகளை நோக்கி வெற்றிகரமாக செயற்படுத்தி வருகின்றது சீனா. இந்திய பெருங்கடலில் இந்தியாவுக்கும் அமரிக்காவிற்கும் இருக்கும் ஆளுமைக்கு எதிரான எச்சரிக்கை மணி ஒலிக்க ஆரம்பித்து மூன்று தசாப்தங்கள் ஆகின்றது என்பதே உண்மை.

இந்திய பெருங்கடலினை சீனப் பெருங்கடலாக மாற்றும் சீனாவின் கனவின் துருப்புச் சீட்டாக அமையும் நாடுகளாக இலங்கையும் மாலை தீவும் இடம்பெறுகின்றது என்பதே மறுக்க முடியாத உண்மையாகும். இலங்கையின் ஹம்பாந்தோட்ட துறைமுகம் பாக்கிஸ்தானின் கவாடர் ( Gwadar) துறைமுகம் மாலை தீவின் புதிதாக அமைக்கப்படும் தீவு ஆகியவை சீனாவின் இராணுவத்தளங்களாக இந்திய பெருங்கடலில் அமைவதற்கு அதிக வாய்புக்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு மேலதிகமாக பங்களாதேஷ் உள்ள கொஸ் பசார் (Cox Bazaar) துறைமுகமும் சீனாவினால் இராணுவ உபகரணங்கள் சேமிக்கும் வகையில் மேம்படுத்தப்படுவதாக தெரியவருகின்றது.

ஆக மொத்தத்தில் சீனாவின் கடன் பொறி இராஜதந்திர ( debit-trap diplomacy) முறை மூலம் இந்திய பெருங்கடலில் உள்ள சீனாவின் அண்டைய நாடுகளை தன் வழிக்கு வெற்றிகரமாக கொண்டுவந்துள்ளது என்பதே உண்மை. இந்திய பெருங்கடல் சீனப் பெருங்கடலாக பெயர் மாற்றம் அடையும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதாகவே தெரிகின்றது. உள்ளாநாட்டு விவகாரங்களில் மாத்திரம் பல தசாப்த்தங்காளாக கட்டுண்டுள்ள உலகிலேயே மிகப்பாரிய ஜனநாய நாடு என தன்னை தானே மார்தட்டிக்கொள்ளும் இந்தியா தனது வெளிநாட்டு கொள்கைகளில் தங்கள் முன்னால் உள்ள விபரீதத்தை உணர்ந்து உரிய மாற்றத்தினை ஏற்படித்தினால் மாத்திரமே இந்திய பெருங்கடல் என்ற பெயரினையாவது பாதுகாக்க முடியும்.

Share on

தேஜா பதிவுகள்

peoplenews lka

அனுமதியின்றி ட்ரோன் கமராவினை இயக்கிய 2 பேர் கைது......

விக்டோரியா அணை, விக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் 4 ஆவது இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை.. Read More

peoplenews lka

1860 இல் இலங்கையை உலகில் முன்னிலை நாடாக மாற்றிய மலையக தமிழ் விவசாயிகள்....

1860 இல் இலங்கையை உலகில் முன்னிலை நாடாக மாற்றிய மலையக தமிழ் விவசாயிகள்... Read More

peoplenews lka

எதிர்கால மனித குலத்துக்கு 90 சதவீதம் கடலுணவு!...

உலகில் பறந்து விரிந்துகிடக்கும் சமுத்திரங்களை நம்பி பல லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பெருங்கடலில் இருந்து மனிதனுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் முதல் வாசனைப் பொருட்கள் போன்ற ஆடம்பரப் பண்டங்கள் வரை கிடைக்கப் பெறுகின்றன... Read More

peoplenews lka

ஏழைகளுக்கு கிட்டுமா கொவிட்19 தடுப்பு மருந்து?...

கொரோனா தடுப்பூசி பற்றிய செய்தி எமக்காகவா?.. Read More